• Mon. Oct 13th, 2025

அன்றும்… இன்றும்… (கவிதை)

Byadmin

Aug 8, 2024

அன்று..வீடு நிறைய குழந்தைகள் இன்று..வீட்டுக்கொரு குழந்தை

அன்று..
பெரியவர் சொல்லி பிள்ளைகள் கேட்டனர்
இன்று..
சிறியவர் சொல்ல பெரியவர் முழிக்கிறார்கள்

அன்று..
குறைந்த வருமானம்
நிறைந்த நிம்மதி
இன்று..
நிறைந்த வருமானம்
குறைந்த நிம்மதி

அன்று..
படித்தால் வேலை
இன்று..
படிப்பதே வேலை

அன்று..
வீடு நிறைய உறவுகள்
இன்று..
நிறைய வீடுகள் உறவுகள் இல்லை

அன்று‌..
உணவே மருந்து
இன்று..
மருந்துகளே உணவு

அன்று..
முதுமையிலும் துள்ளல்
இன்று..
இளமையிலேயே அல்லல்

அன்று..
உதவிக்கு தொழில்நுட்பம்
இன்று..
தொழில்நுட்பம்தான் எல்லாம்

அன்று..
யோக வாழ்க்கை
இன்று..
எந்திர வாழ்க்கை

அன்று..
தியாகிகள் நாட்டை காப்பாற்றினர்
இன்று..
அரசியல்வாதிகள் நாட்டை விற்கின்றனர்

அன்று..
படங்களில் ஒரு குத்து பாட்டு
இன்று..
குத்து பாட்டில் தான் படமே

அன்று..
ஓடினோம் வயிற்றை நிறைக்க
இன்று..
ஓடுகின்றோம் வயிற்றை குறைக்க

அன்று..
பெரியோர்கள் பாதையில்
இன்று..
இளைஞர்கள் போதையில்

அன்று..
ஒரே புரட்சி
இன்று..
ஒரே வறட்சி

அன்று..
சென்றார்கள் வளர்ச்சியில்
இன்று..
செல்கிறது சினிமா கவர்ச்சியில்

அன்று..
சட்டசபை
இன்று..
சட்டை கிழியும் சபை

அன்று..
மக்கள் நலன் ஆட்சி
இன்று..
சிக்கல் தரும் ஆட்சி

அன்று..
ஊரே கூட கோலாகல விழா
இன்று..
ஊருக்கே போக முடியாத மூடுவிழா

அன்று..
கைவீசி நடந்தோம்
இன்று..
கைப்பேசியுடன் நடக்கிறோம்

அன்று..
ஜனநாயகம்
இன்று..
பணநாயகம்

அன்று..
விளைச்சல் நிலம்
இன்று..
விலை போன நிலம்

அன்று..
தொட முடியாத உச்சத்தில் காதல்
இன்று..
தொட்டு முடியும் எச்சம் காதல்

அன்று..
கோடை விடுமுறையில் உறவுகளிடம் தஞ்சம்
இன்று..
கோடை விடுமுறையில் உறவுகளிடம் அச்சம்

அன்று..
உயிரை கொடுத்து உறவு வாழ்ந்தது
இன்று..
உறவே உயிரை பறிக்கிறது

அன்று..
நிறைந்தது மகிழ்ச்சி
இன்று..
நடக்குது வெற்று நிகழ்ச்சி

அன்று..
வாழ்ந்தது வாழ்க்கை
இன்று..
ஏதோ வாழும் வாழ்க்கை…

படித்ததில் பிடித்தது 👍🏻

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *