சுங்க வரி செலுத்தாமல் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட கையடக்க தொலைபேசிகள் மற்றும் மடிக்கணினிகள் என்பவற்றை பறிமுதல் செய்ய பிரதி சுங்கப் பணிப்பாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
நேற்று (10) அதிகாலை 12.30 மணியளவில் டுபாயில் இருந்து இலங்கை வந்த மூன்று விமானப் பயணிகள் இந்த கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் மடிக்கணினிகளை இலங்கைக்கு கொண்டு வந்துள்ளனர்.
இவ்வாறு 36 ஐபோன்களும் 06 மடிக்கணினிகளும் கொண்டுவரப்பட்டுள்ளன.
பயணப் பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் மடிக்கணனிகளை வெளியில் எடுத்து செல்ல முற்பட்ட போது கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அவற்றை கையகப்படுத்தினர்.
கொழும்பு, தெமட்டகொடை பிரதேசத்தை சேர்ந்த மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், சுங்க சோதனையின் பின்னர் கையடக்க தொலைபேசிகள் மற்றும் மடிக்கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சந்தேகநபர்கள் மூவருக்கும் 16 இலட்சம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறு பிரதி சுங்கப் பணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
36 ஐபோன்களும் 06 மடிக்கணினிகளும் பறிமுதல்
