• Sat. Oct 11th, 2025

ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டியது (கணவன்)

Byadmin

Aug 23, 2024
  1. நீங்கள் தினசரி வீட்டிற்கு தாமதமாக வந்தால் உங்கள் திருமண வாழ்க்கையின் நெருக்கம் பாதிக்கப்படும்.
  2. உங்கள் மனைவிக்கு விலையுயர்ந்த பரிசுகளை வாங்குவதால் மட்டும், உங்கள் மனைவிக்கு நீங்கள் கவர்ச்சியாக தெரிய மாடீர்கள். அவளுடைய உணர்ச்சிகளை நீங்கள் எவ்வாறு கவனிக்கிறீர்கள் என்பதன் காரணமாகவே அவர் ஒரு ஆணின் கவர்ச்சியை உங்களிடம் காண்கிறார்.
  3. நீங்கள் வேறொரு பெண்ணை நெருங்குவதாக உங்கள் மனைவி சந்தேகப்பட்டால், அவரது உடலை உங்களுக்கு தருவதில் உடன்படமாட்டார். விசுவாசமே நல்ல உறவுக்கு அடித்தளம்.
  4. நாள் முழுவதும் உங்கள் மனைவியைத் தவிர்த்துவிட்டு, இரவில் மட்டும் அவள் உங்களுடன் முழு மனதுடன் நெருங்கி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்.
  5. பெரும்பாலான பெண்கள் தங்கள் உணர்ச்சிகளால் காதலிக்கிறார்கள், அவர்களுக்கு, தாம் நேசிக்கப்படுகிறோம் என்ற உணர்வு முக்கியமானது. நீங்கள் அவள் உணர்ச்சிகளை காயப்படுத்தினால், அந்த காதலை அவள் ஏற்க தயங்குவாள்.
  6. இன்றிரவு அவள் உங்களுடன் இருக்க தயாராக இல்லை எனில், ஏதேனும் சிக்கல் இருக்கிறதா என்பதைக் கண்டுபிடித்து அதைத் தீர்க்கவும்.

அவள் உண்மையிலேயே சோர்வாக இருந்தால் அல்லது அந்த மனநிலையில் இல்லை என்றால், இன்றே உலகம் அழியப்போவதில்லை. இன்று நீங்கள் அவளிடம் எப்படி நடந்துகொள்கிறீர்கள் என்பதுதான் நாளை காதல் எப்படி இருக்கும் என்பதை தீர்மானிக்கும்

  1. நீங்கள் திருமண உரிமையை வைத்து பாலியல் உரிமையை மிரட்டி கோருகிறீர்கள் என்றால், இனி உங்களுக்குள் நெருக்கம் இருக்காது, பாலியல் வக்கிரம் உறவை எளிதில் சிதைத்துவிடும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
  2. உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும், சில சமயங்களில் அவளுக்கு உங்களிடமிருந்து தேவைப்படுவது உனது ஆணுறுப்பு அல்ல, அவளைப் அணைத்து, அரவணைக்க உன் கைகள்.

வாழ்த்துக்கள் நண்பர்களே,,
புரிந்து வாழ்ந்தால், வாழ்க்கை சொர்கமே..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *