• Tue. Oct 14th, 2025

வாக்களிப்பு நாளில் இவற்றுக்கு தடை!

Byadmin

Sep 13, 2024

இந்த முறை பரபரப்பான தேர்தல் என்பதால் சட்ட திட்டங்களுக்கு அமைய செயற்படுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க அனைத்து தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.

வாக்களிக்கும் காலப்பகுதியில் வாக்காளர் அல்லது வேட்பாளர் தொலைபேசியை வாக்களிப்பு நிலையத்திற்கு எடுத்துச் செல்வது தடை செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்,

““ஊடக விதிமுறைகளில் சமூக ஊடகங்கள் சேர்க்கப்பட்டாலும், சமூக ஊடக சட்டங்களுக்கு வரவில்லை.

நாம் முடிந்தவரை அவ்வாறான விடயங்களை தடுத்தோம். ஏனைய ஊடகங்களுக்கும் இதுவே.

வழக்கு போடும் என அது இதுவென நான் கூறவரவில்லை. நாங்கள் செய்யக்கூடிய மற்ற விடயங்கள் உள்ளன.”

“சில ஊடகங்கள் எங்கள் கட்டுப்பாட்டை மீறிச் சென்றால், ஆணையத்திற்கும் அந்த ஊடகத்திற்கும் இடையிலான அனைத்து தொடர்பையும் நிறுத்திவிடுவோம்.

அதிகாரப்பூர்வ முடிவுகளை வெளியிடும் போது, ​​அந்த நிறுவனத்திற்கு அதிகாரப்பூர்வ முடிவுகளை வெளியிடுவது இல்லையா? என்பதை பரிசீலிப்போம்.

18ம் திகதிக்கு பிறகு 48 மணி நேரம் அமைதியான காலம் வரும்.

அந்த நேரத்தில் ஊடகங்கள் எப்படி நடந்து கொள்கின்றன என்பது மிக முக்கியமானது.

வாக்காளர் இறுதி முடிவை எடுப்பதை எளிதாக்கும் வகையில் இந்த 48 மணிநேரம் வழங்கப்படுகிறது.

“வாக்களிப்பு காலத்தில், எந்தவொரு வாக்காளரும், வேட்பாளரும் தொலைபேசியுடன் வாக்குச்சாவடிக்கு செல்லக்கூடாது என்று தடை விதித்துள்ளோம்.

புகைப்படம் எடுப்பது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது.

தபால் வாக்களிப்பில் அவ்வாறு செய்தவர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

“இது மிகவும் பரபரப்பான தேர்தலாகும்.

இந்நிலையில் முதல் கட்ட வாக்கு எண்ணிக்கையை நிறுத்த ஒரு ஓட்டு போதும்.

முதல் சந்தரப்பத்தில், வேட்பாளர் ஒருவர் 50% மேல் ஒரு வாக்கு பெற்றாலும் முதல் கட்டம் அப்போதே முடிந்துவிடும்.

அந்த நேரத்திலேயே ஜனாதிபதியைஅறிவிக்க முடியும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *