• Sat. Oct 11th, 2025

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மைதானத்தில் தற்கொலை முயற்சி

Byadmin

Oct 2, 2017

அணியில் தெரிவு செய்ய மறுத்ததாலும், லஞ்சம் கேட்டதாலும் மனமுடைந்த இளம் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மைதானத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குலாம் ஹைதர் அப்பாஸ் என்ற வலது கை வேகப் பந்து வீச்சாளர் லாகூர் நகர கிரிக்கெட் சபை மைதானத் துக்குள் திடீரென புகுந்தார்.

அங்கு முதல்தர கிரிக்கெட் போட்டி நடைபெற்று கொண் டிருந்த நேரத்தில் தன் உடல் மீது பெற்றோலை ஊற்றி கொண்ட அப்பாஸ் தற்கொ லைக்கு முயன்றார்.

அங்கிருந்தவர்கள் உடனடி யாக அவரை தடுத்து நிறுத்தி காப்பாற்றினார்கள்.

பின்னர் அப்பாஸ் கூறுகையில், அதிகாரிகள் தனக்கு ஏகப்பட்ட பொய் வாக்குறுதிகளை அளித் ததாகவும் லாகூர் அணிக்கு தெரிவு செய்யப்படுவேன் என தன்னை ஏமாற்றி வருவதா கவும் தெரிவித்துள்ளார்.

கிளப் போட்டிகளில் நன் றாக விளையாடினாலும் தான் ஏழை என்பதால் தன்னை புறக் கணிப்பதாகவும், அணிக்கு ஆட வேண்டுமென்றால் பணம் கொடுக்க வேண்டும் என அதிகாரிகள் வற்புறுத்துவ தாகவும் அப்பாஸ் குற்றம்சாட் டியுள்ளார்.

இதன் காரணமாகவே விரக்தியடைந்து தற் கொலைக்கு முயன்றதாகவும், தனது புகார்களை பரிசீலிக்கவில்லையெனில் கடாபி மைதான வாயிலில் தீக்குளிப்பேன் என்றும் மேலும் கூறியுள்ளார்.

https://www.siasat.com/news/feb-rejections-pakistan-cricketer-attempts-suicide-match-1238124/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *