குவைத் நாட்டிற்கான புதிய இலங்கை தூதுவரை நியமிக்க பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி குவைத்துக்கான புதிய இலங்கை தூதுவராக ஏ.எல். ரத்நாயக்கவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் தலைமையில் கடந்த 18ஆம் திகதி கூடிய உயர் அதிகாரிகள் குழு இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.