• Sun. Oct 12th, 2025

இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் கைது

Byadmin

Sep 20, 2024

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

5,000 ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் பொத்துஹெர பொலிஸ் நிலையத்தின் சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சட்டவிரோத மதுபானம் தொடர்பில் வழக்குப்பதிவு செய்துள்ள நபரிடம் விபரங்களை உள்ளடக்காமல் பொலிஸ் அறிக்கையை வழங்குவதற்காகவே இந்த இலஞ்ச தொகை கோரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் பொத்துஹெர பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இலஞ்சப் பணத்தை பெற்றுக்கொண்ட போதே சந்தேகத்திற்குரிய பொலிஸ் சார்ஜன்ட் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *