• Sat. Oct 11th, 2025

கமிந்து மெண்டிஸின் உலக சாதனை!

Byadmin

Sep 26, 2024

தொடக்க ஆட்டத்தில் இருந்து தொடர்ந்து 8 போட்டிகளில் 50 ஓட்டங்களை கடந்த உலகின் முதலாவது துடுப்பாட்ட வீரர் என்ற சாதனையை இலங்கை அணியின் வீரர் கமிந்து மெண்டிஸ் இன்று படைத்துள்ளார்.

தற்போது நியூசிலாந்துக்கு எதிராக காலியில் நடைபெற்று வரும் 02வது டெஸ்ட் போட்டியிலேயே அவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இப்போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி இன்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 306 ஓட்டங்களை எடுத்துள்ளது.

இலங்கை அணி சார்பில் Dinesh Chandimal 116 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்ததுடன், Angelo Mathews 78 ஓட்டங்களுடனும் Kamindu Mendis 51 ஓட்டங்களுடனும் ஆடுகளத்தில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *