• Sat. Apr 4th, 2026

ரயில்வே திணைக்களம் பொது மக்களிடம் கோரிக்கை!

Byadmin

Sep 27, 2024

பராமரிப்பு பணிகள் காரணமாக களனிவெளி ரயில் பாதையில் பெங்கிரிவத்தை ரயில் கடவையை தற்காலிகமாக மூடுவதற்கு ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ரயில் பாதையில் உள்ள மதகு ஒன்றின் திருத்தப் பணிகள் காரணமாக எதிர்வரும் 29ஆம் திகதி காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை கடவை மூடப்படும் என ரயில்வே திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதியில் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு ரயில்வே திணைக்களம் மக்களை கோரியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *