• Fri. Nov 28th, 2025

அரிசி விலை தொடர்பில் வௌியான தகவல்

Byadmin

Nov 5, 2024

2024 ஆம் ஆண்டு யால மற்றும் மஹா பருவத்தில் அரிசி உபரியாக காணப்படும் பின்னணியில் அரிசி தட்டுப்பாடு மற்றும் அரிசியின் விலை அதிகரிக்க வாய்ப்பு இல்லை என ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், நிறுவனத்தின் பணிப்பாளர் பேராசிரியர் ஏ. எல். .ரந்திக, நெல் கொள்வனவு விடயத்தில் அரசாங்கத்தின் குறைந்தபட்ச தலையீடுகளே அரிசியின் விலை உயர்வுக்கு வழிவகுத்துள்ளதாக குறிப்பிட்டார்.

சந்தையில் நாட்டு அரிசிக்கு தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வால் நுகர்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அரிசியின் விலையைக் கணக்கிடும் போது அரிசி உற்பத்தியின் உப தயாரிப்புகள் தொடர்பில் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *