• Fri. Nov 28th, 2025

உர மானியம் தாமதத்திற்கான காரணம் வௌியானது

Byadmin

Nov 19, 2024

கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக உர மானியப் பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, இந்த விடயம் தொடர்பில் ஆராய அதிகாரிகள் குழுவொன்று நேற்று அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவித்த விவசாய அமைச்சு, இது தொடர்பான அறிக்கையை இன்று (19) விவசாய அமைச்சின் செயலாளரிடம் கையளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

உர மானிய பணத்தை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வழங்குவதற்கு தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

எனினும், குறித்த பணம் இதுவரை கிடைக்கவில்லை என விவசாயிகள் நேற்று ஊடங்களுக்கு தெரிவித்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *