• Sat. Oct 11th, 2025

தம்பலகாமம் தாயிப் நகர், வீதி உடைந்ததால் போக்குவரத்து தடை

Byadmin

Nov 27, 2024

தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக தம்பலகாமம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட தாயிப் நகர் கோயிலடி வைத்தியசாலை வீதியின் ஒரு பகுதி உடைந்துள்ளதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது எனவே இவ் வீதி ஊடாக பயணிப்பதை தவிர்த்து மாற்று வழி ஊடாக பொது மக்களை பயணிக்குமாறு தம்பலகாமம் பிரதேச செயலகம் பொது மக்களை கேட்டுள்ளது.

கன மழை காரணமாக தம்பலகாமம் பகுதியில் உள்ள பல தாழ் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் மக்களின் இயல்பு நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது .முள்ளியடி பகுதியில் விவசாய நிலங்கள் உட்பட மக்களின் குடியிருப்பு பகுதிகளிலும் நீர் புகுந்துள்ளதால் பல அசௌகரியங்களை எதிர் நோக்குவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

நீரில் மூழ்கியுள்ள பகுதிகளில் மேலதிக நீரை வெளியேற்ற பிரதேச செயலகம் ஊடாக மும்முரமாக பெகோ இயந்திரம் ஊடாக நடை முறைப்படுத்தி வருகின்றனர். அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஊடாக பல்வேறு நடவடிக்கைகளும் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *