• Fri. Nov 28th, 2025

94 நிறுவனங்களின் பொறுப்பு ஜனாதிபதியிடம்

Byadmin

Nov 27, 2024

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் கீழ் உள்ள 3 அமைச்சுக்கள் தொடர்பான வர்த்தமானிகள் வெளியிடப்பட்டுள்ளதுடன், 94 நிறுவனங்களின் பொறுப்பு ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த 94 நிறுவகளும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழும் பாதுகாப்பு அமைச்சின் கீழும் பிரிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு, மாகம்புர துறைமுக முகாமைத்துவ நிறுவனம், இலங்கை மற்றும் மிஹின் லங்கா நிறுவனங்கள், இலங்கை முதலீட்டுச் சபை, அத்துடன் ஊழியர்களின் நம்பிக்கை நிதிய கலால் திணைக்களம், உள்நாட்டு இறைவரித் திணைக்களம், சுங்கம், மத்திய வங்கி, ஹோட்டல் திட்டங்கள், அபிவிருத்தி லொத்தர் சபை, உள்நாட்டு இறைவரி திணைக்களம் ஆகியவை உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, பாதுகாப்பு அமைச்சின் கீழ் பாதுகாப்புப் பணியாளர்களின் தலைமை அலுவலகம், ஆயுதப் படைகள், அரச புலனாய்வு சேவை மற்றும் சிவில் பாதுகாப்புத் துறை ஆகியவை உள்ளன.

மேலும், டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் கீழ் இலங்கை டெலிகொம் கட்டுப்பாட்டு நிறுவனங்கள், கணினி அவசர பதில் பிரிவு, தரவு பாதுகாப்பு அதிகாரசபை, ஆட்கள் பதிவு திணைக்களம், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு உள்ளிட்ட ஏழு நிறுவனங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *