• Fri. Nov 28th, 2025

மத்ரசா மாணவர்களுக்கு, நேற்று நடந்தது என்ன..?

Byadmin

Nov 27, 2024

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேசத்தில் காணப்படும் அறபுக் கல்லூரி ஒன்றில் கல்வி பயிலும் மாணவர்களில் சிலர் நேற்று முன்தினம் (26) வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டதில் 05 மாணவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதுடன் 06 மாணவர்கள் காணாமல் போயிருந்தனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது :

தற்போது பெய்து வரும் அடைமழை காரணமாக நிந்தவூர் மதரஸா பாடசாலையொன்றில் கல்விகற்று வந்த சிறுவர்களுக்கு நேற்று முன்தினம் (26) விடுமுறை வழங்கப்பட்டு, பிற்பகல் அவர்கள் தங்களது சொந்த ஊரான சம்மாந்துறைக்கு, மாவடிப்பள்ளி பாலத்தின் ஊடாக உழவு இயந்திரத்தில் பயணித்த போது, உழவு இயந்திரம் கவிழ்ந்ததில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

குறித்த வீதியானது வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதினால் இந்த வீதியில் மோட்டார் சைக்கிள், கார் பேருந்து போன்ற பயணம் செய்ய முடியாத நிலை காணப்பட்டுள்ளதுடன், இந்த வீதியினூடாக உழவு இயந்திரம் மாத்திரமே பயணம் மேற்கொண்டு வந்தது. குறிப்பாக பிரயாணிகளை ஒரு கரையிலிருந்து மறுகரைக்கு ஏற்றி இறக்கும் பணியினை செய்து வந்திருந்தது.

இந்நிலையில், இந்த உழவு இயந்திரத்தில் 11 மதரஸா மாணவர்கள் பயணித்நுள்ளனர். இதில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு கவிழ்ந்த சந்தர்ப்பத்தில் 5 மதரசா மாணவர்கள் மீட்கப்பட்டனர். இதில் இயந்திரத்தின் சாரதி உட்பட 06 மாணவர்கள் காணாமல் போயுள்ளதுடன், இவர்களில் இருவர் ஜனாசாக்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

தற்போது குறித்த பகுதியில் தொடர்ச்சியாக இரண்டு நாட்களாக இலங்கை கடற்படை, இராணுவம் மற்றும் சுழியோடிகள் இணைந்து தேடுதல் பணிகளை முன்னெடுத்து வருவதுடன், உழவு இயந்திரத்தோடு இரண்டு மோட்டார் சைக்கிள்களும் மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை குறித்த விபத்து சம்பந்தமான மேலதிக விசாரணையினை இராணுவம் மற்றும் பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் தொடர்ந்தும் இந்த பகுதியில் தேடுதல் பணிகள் இடம் பெற்று வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *