• Fri. Nov 28th, 2025

ஜனாதிபதி நிதியம் தொடர்பில் ரணில் விளக்கம்

Byadmin

Dec 20, 2024

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது ஆட்சிக் காலத்தில் ஜனாதிபதி நிதியத்தில் இருந்து பணம் வழங்கப்பட்ட விதம் குறித்து விளக்கமளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள், அனைத்து விண்ணப்பங்களுக்கும் பணம் செலுத்தப்பட்டதாகவும், அதற்காக 1515 மில்லியன் ரூபாவும், 2023 இல் 839 மில்லியன் ரூபாவும், 2024 செப்டெம்பர் வரையிலான காலப்பகுதியில் நோயாளர்களுக்கான மருத்துவ உதவியாக சுமார் 450 மில்லியன் ரூபாவும் செலுத்தப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பிரதிநிதிகள் தனிப்பட்ட ரீதியில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்த போதிலும், ஒரு கோரிக்கையை தவிர ஏனைய அனைத்து கோரிக்கைகளுக்கும் ஜனாதிபதி நிதியத்தின் பொது நடைமுறைகளை பின்பற்றி 10 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான நிதியுதவி வழங்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

2022 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் திகதி வரை ஜனாதிபதி நிதியத்தில் வைக்கப்பட்டிருந்த 7,000 மில்லியன் ரூபாவை பணத்திற்காக, பல்வேறு கொடுப்பனவுகள் இருந்தபோதிலும், 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி வரை 11,000 மில்லியன் ரூபாவைத் தாண்டிய மீதியை பேணுவதற்கு தாம் நடவடிக்கை எடுத்ததாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, கடந்த 11 மாதங்களில் தனது பாதுகாப்புச் செலவுகளுக்காக 82 மில்லியன் ரூபா செலவிடப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *