• Fri. Nov 28th, 2025

அரிசி இறக்குமதிக்கான கால அவகாசம் நீடிப்பு

Byadmin

Dec 24, 2024

அரிசி இறக்குமதிக்கு வழங்கப்பட்ட கால அவகாசத்தை நீடிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இன்று (24) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்தார்.

இதற்கமைய, அரிசி இறக்குமதிக்கான கால அவகாசத்தை 2025 ஜனவரி 10 ஆம் திகதி வரை நீடிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.

உள்நாட்டு சந்தையில் அரிசித் தட்டுப்பாடு 2025 ஆம் ஆண்டு ஜனவரி இறுதி வரை நீடிக்க வாய்ப்புள்ளதாக அவதானிக்கப்பட்டுள்ள நிலையில், வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அதன்படி, அந்த காலத்தை நீட்டிக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *