• Fri. Nov 28th, 2025

துறைமுகத்தில் கொள்கலன் செயல்பாடுகளை வினைத்திறனாக்க நடவடிக்கை!

Byadmin

Dec 24, 2024

இலங்கை துறைமுக அதிகாரசபையின் கொள்கலன்களை விடுவிக்கும் பணிகளை வினைத்திறனாக்கும் நோக்கத்திற்காக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கான குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கொழும்புத் துறைமுகத்தின் தனியார் துறையினருக்குச் சொந்தமான 02 கொள்கலன் முனையங்கள் மற்றும் அரசுக்குச் சொந்தமான 02 கொள்கலன் முனையங்களுடன் மொத்தமாக 04 கொள்கலன் முனையங்கள் இயங்கி வருவதுடன், மீள் ஏற்றுமதிக்கான தடைநீக்க ஒப்புதல் வழங்கல் உள்ளிட்ட, ஒரு கொள்கலன் முனையத்தின் ஊடாக ஒரு நாளுக்கு 5000 – 10,000 கொள்கலன்கள் பரிசீலிக்கப்பட்டு விடுவிக்கப்படுகின்றது.

சுங்க அதிகாரிகள் வெளியேறும் வாயிலில் பரிசீலிப்பதற்குத் தேவையான கொள்கலன்களைத் தீர்மானித்து, குறித்த கொள்கலன்களைப் பௌதீக ரீதியாக ஸ்கான் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். கடந்த காலங்களில் தடைநீக்க ஒப்புதல் வழங்கல் செயன்முறையில் பல்வேறு பிரச்சினைகள் தோன்றியுள்ளமையால், சுங்க அதிகாரிகள் அன்றாடம் அதிகளவான கொள்கலன்களைப் பரிசீலித்துள்ளதுடன், துறைமுகத்திற்கு உள்வருகின்ற கப்பல்களின் எண்ணிக்கையில் சற்று அதிகரிப்பும் காணப்படுகின்றது. கொள்கலன்களை விடுவிப்பதற்காக தற்போது கடைப்பிடிக்கின்ற முறைமையின் வினைத்திறனை மேலும் அதிகரித்து எந்தவொரு தாமதமுமின்றி துறைமுகத்திலிருந்து கொள்கலன்களை விடுவிப்பதற்குப் பொருத்தமான ஒழுங்குமுறையை அமுல்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக போக்குவரத்து நெடுஞ்சாலைகள் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் தலைமையிலான குழுவொன்றை நியமிப்பதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசதனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *