• Mon. Oct 13th, 2025

தீர்வு கோரி அமைச்சரை தேடிச் சென்ற மீனவர்கள்!

Byadmin

Dec 28, 2024

பருத்தித்துறை – முனை கடற்றொழிலாளர்கள் கூட்டுறவுச் சங்கத்திற்குட்பட்ட மீனவர்கள் நேற்றைய தினம் (27) யாழ் மாவட்டச் செயலர், ஆளுநர் மற்றும் கடற்றொழில் அமைச்சரையும் சந்தித்து மகஜர்களை கையளித்து தாம் எதிர் நோக்கும் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.

பருத்தித்துறை முனை கடற்றொழிலாளர்களின் மீன்பிடி வாடிகளை அகற்றுமாறும் தவறும் பட்சத்தில் இரு வாரங்களின் பின் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கரையோரம் பேண் திணைக்களம் அறிவித்துள்ளது.

இலங்கை பூராகவும் கடற்கரையோரங்களில் மீனவர்களின் மீன்பிடிவாடிகள் அமைக்கப்பட்டுள்ளது, இதன் மூலமே மீனவர்கள் தமது வாழ்வாதாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இது இவ்வாறிருக்க பருத்தித்துறை முனை கடற்றொழிலாளர்களின் கரையோர வாடிகளை மாத்திரம் அகற்றுமாறு கரையோர பேண் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது ஏன்?

இதனால் எமது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிப்படையும் என மீனவர்கள் அமைச்சரிடமும் மாவட்ட அரச அதிபரிடமும் முறையிட்டுள்ளனர்.

இதனை உடன் நிறுத்துமாறு அமைச்சர் இ.சந்திரசேகரன் குறித்த திணைக்கள அதிகாரிக்கு தெரியப்படுத்தியுள்ளதுடன் அடுத்து வரும் அமைச்சரவைக் கூட்டத்தின் போது இதற்கான தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *