• Wed. Jun 10th, 2026

கொழும்பு பங்குச் சந்தையில் வளர்ச்சி

Byadmin

Jan 20, 2025

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (20) 115.84 புள்ளிகள் அதிகரித்துள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் இன்று 16,373.15 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, S&P SL20 சுட்டெண் 30.37 புள்ளிகள் அதிகரித்து 4,962.03 புள்ளிகளாகவும் பதிவாகியுள்ளது.

மேலும், இன்றைய வர்த்தக நாள் நிறைவில் பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 5.56 பில்லியன்களாக பதிவாகி உள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *