• Sat. Apr 4th, 2026

காலி – கொழும்பு பிரதான வீதியில் விபத்து

Byadmin

Feb 7, 2025

அஹூங்கல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காலி – கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பலப்பிட்டிய பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ்ஸொன்று பலப்பிட்டிய பஸ் தரிப்பிடத்தில் பயணிகளை இறக்கிவிட்டு மீண்டும் புறப்பட்ட போது துவிச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவர் பஸ்ஸில் மோதி விபத்துக்குள்ளானார்.

விபத்தில் பலத்த காயமடைந்த அவர் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரழந்த நபர் 60 வயதுடைய பலப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

சடலம் தற்போது பலப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அஹூங்கல்ல பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *