• Fri. Apr 10th, 2026

35 வயதை அடைந்திருந்தாலேயே முச்சக்கர வண்டி செலுத்தலாம் ? விரைவில் சட்டம்

Byadmin

Oct 21, 2017

நாட்டில் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் முச்சக்கர வண்டிகளைச் செலுத்தத் தடை விதிக்கும் புதிய சட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் முச்சக்கர வண்டிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நிதி அமைச்சிடம் போக்குவரத்து அமைச்சர் இன்று (20) பிரேரணையொன்றை முன்வைத்துள்ளார்.

நாட்டில் முப்பது இலட்சத்துக்கும் மேற்பட்ட முச்சக்கர வண்டிகள் இயங்குகின்றன. வாகன நெரிசலுக்கும் அதிகமான விபத்துக்களுக்கும் முச்சக்கர வண்டிகளே காரணம். இவற்றைத் தடுப்பதற்கான முயற்சியாக, இறக்குமதி செய்யப்படும் முச்சக்கர வண்டிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும்படியும் அந்தப் பிரேரணையில் கூறியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.  (மு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *