• Sun. Oct 12th, 2025

கடந்த 2 மாதங்களாக மாணவி மாயம்

Byadmin

Feb 24, 2025

மாத்தளை – கந்தேநுவர பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் கடந்த டிசம்பர் மாதம் 06 ஆம் திகதியிலிருந்து காணாமல்போயுள்ளதாக கந்தேநுவர பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது.

இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் காணாமல்போயுள்ள பாடசாலை மாணவியின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

காணாமல் போன மாணவின் பெயர் லமங்கெதர தருசி சம்பிகா ஆகும். அவ் மாணவி சுமார் 05 அடி உயரம் அவர் இலக்கம் 85 கந்தேசநுவர அல்வத்தை என்ற முகவரியில் வசிக்கின்றாள் காணாமல் போன மாணவி தொடர்பில் தகவல்கள் கிடைத்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்குத்071 – 8592943 அல்லது 066 – 3060954 தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *