• Sat. Oct 11th, 2025

அபாரமான ஆணுறுப்பு எழுச்சிக்கு இந்த உணவுகள் கை கொடுக்கும்!

Byadmin

Sep 21, 2025

ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாடு என்பது வயதான ஆண்களுக்கு ஏற்படும் பொதுவான குறைபாடே. ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவில் மிகப்பெரிய வீழ்ச்சி ஏற்படுவது தான் இந்த குறைபாடுக்கு முக்கிய காரணமாக விளங்குகிறது. 40 வயதை கடந்த ஆண்களுக்கு தான் இது அதிகமாக வரக்கூடும்.


சமீபத்திய புள்ளி விவரங்கள் படி, 45 வயதை கடந்த ஆண்களில் 5 சதவீத பேர்களுக்கும், 60 வயதை கடந்த ஆண்களில் 20-25 சதவீத பேர்களுக்கும் ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாடு உள்ளது. இந்த ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டினைக் குணப்படுத்த சில மருத்துவ வழிமுறைகளும் இருக்க தான் செய்கிறது.
இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பதை பற்றி பேசுகையில், இயற்கை வழிமுறையே இதனை சரி செய்வதற்கான சிறந்த வழியாகும். ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டிற்கான இயற்கை வைத்தியங்களைப் பற்றி தான் பார்க்க போகிறோம்.
ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டிற்கான இயற்கை சிகிச்சையில் நம் கவனத்தை செலுத்தியுள்ள நாம் கீழ் கூறியவற்றை கருத்தில் கொள்ள வேண்டும். ஆண்மை குறைவை நிவர்த்தி செய்யும் உணவுகள், ஆண்மை குறைவிற்கான இயற்கை சிகிச்சைகள், விறைப்பு செயல் பிழற்சியை குணப்படுத்தும் உணவுகள் மற்றும் விறைப்பு செயல் பிழற்சிக்கான இயற்கை சிகிச்சைகள்.

சரி இப்போது ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டிற்கான இயற்கை வைத்தியங்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். இதோ அதற்கான 15 வழிகள்…


பூண்டு
பாலியல் உறுப்பில் போதிய அளவிலான இரத்த ஓட்டம் இல்லாதது ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டிற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். இரத்த ஓட்டத்தை சீராக்கி அழுத்தத்தை அதிகரிக்க பூண்டு உதவும். இதனால் பாலியல் உறுப்பு தூண்டப்படும். மேலும் ஆண்களின் விந்தணு எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு பூண்டில் பல கனிமங்கள் வளமையாக உள்ளது.


மாட்டிறைச்சி
மாட்டிறைச்சியில் ஜிங்க் வளமையாக உள்ளது. இந்த ஜிங்க் ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டிற்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான முதன்மையான இயற்கை பொருளாக விளங்குகிறது. இது விந்தணு எண்ணிக்கையை மேம்படுத்தும் ஆற்றலை கொண்டுள்ளது. ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டினை குணப்படுத்தும் சில சக்தி வாய்ந்த உணவுகளில் இதுவும் ஒன்றாகும்.


மாதுளை பழம்
மாதுளை பழம் என்பது பல காரணங்களால் சக்தி வாய்ந்த உணவாக விளங்குகிறது. கனிமங்கள் மற்றும் அதிமுக்கிய வைட்டமின்கள் வளமையாக உள்ள இந்த பழம் இயற்கையான முறையில் ஆண்மை குறைவை நீக்கும். ஆன்டி-ஆக்சிடன்ட்கள் கலவை வளமையாக உள்ள மாதுளை பழம் ஆண்களின் விந்தணு எண்ணிக்கையை போதிய அளவில் அதிகரிக்கும்.


டார்க் சாக்லெட்
ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டு பிரச்சனையை பொறுத்த வரை, அதற்கு தீர்வை அளிக்கும் அதிசயத்தை தருகிறது டார்க் சாக்லெட். டார்க் சாக்லெட்டில் இரத்த சுற்றோட்டத்தை மேம்படுத்தும் ஃப்ளேவோனாய்டுகள் உள்ளது. மேலும் ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டிற்கு முக்கிய காரணமாக விளங்கும் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கவும் இது உதவுகிறது.


வாழைப்பழங்கள்
தினமும் ஒரு வாழைப்பழம் உட்கொண்டால போதும், ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாடு மெல்ல நீங்கும். வாழைப்பழத்தில் பிரோம்லைன் என்ற முக்கிய என்ஸைம் உள்ளது. இது உடலில் உள்ள பாலியல் ஹார்மோன்களை சீராக்க உதவுகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இது போக வாழைப்பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் பி1 வளமையாக உள்ளதால், அது ஆண்களின் ஆற்றலை ஊக்குவித்து, பாலியல் மனநிலையை தூண்டி விடும்.


கடல் சிப்பி
ஆண்களின் விந்தணு எண்ணிக்கைகளை அதிகரிக்க உதவும் உணவுகளில் மற்றொன்று தான் கடல் சிப்பிகள். பாதிப்படைந்த விந்தணுக்களுக்கு உதவிடும் கடல் சிப்பிகள்.


வால்நட்
இயற்கையான முறையில் விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் முக்கியமான பொருளான அர்கனைன் வால்நட்களில் உள்ளது. விந்தணு உற்பத்தியில் விரைக்கு உதவிடும் அர்கனைன். திடமான விறைப்பிற்கும் கூட வால்நட் உதவுகிறது. இது போக, வால்நட்களில் உள்ள ஒமேகா-3 கொழுப்பமிலங்கள், ஆண்களின் பாலியல் உறுப்பில் இரத்த ஓட்டத்தை சீராக்க உதவிடும்.


வெண்ணெய்ப் பழம்
இதற்காக தானே நாம் காத்து கொண்டிருந்தோம்; ஆம், பல மருத்துவ நிலைகளை குணப்படுத்தும் ஆற்றலை கொண்டுள்ள ஆரோக்கியமான பழமாக வியாழ்ந்குகிறது வெண்ணெய்ப்பழம். ஃபோலிக் அமிலம், வைட்டமின்கள் மற்றும் வெள்ளத்தை போல் கனிமங்கள் வளமையாக அதில் அடங்கியுள்ளதால், விந்தணு இயக்கத்தை ஊக்குவிக்கும். ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டிற்கான மிகச் சிறந்த இயற்கை சிகிச்சைகளில் இதுவும் ஒன்றாகும்.


அஸ்பாரகஸ்
அஸ்பாரகஸ் என்னும் தண்ணீர்விட்டான் கிழங்கில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் வளமையாக உள்ளது. பல மருத்துவ நிலைகளை குணப்படுத்தும் ஆற்றலை கொண்டுள்ளது இது. ஆண்களின் விந்தணு எண்ணிக்கையை ஊக்குவிக்கும் மிகச் சிறந்த உணவுகளில் இதுவும் ஒன்றாகும்.


உடற்பயிற்சி
இப்போது நம் கவனத்தை சற்று திருப்பி, ஆண்மை குறைவிற்கான இயற்கை சிகிக்ச்சைகள் பக்கமாக மாற்றுவோம். உடற்பயிற்சி என்பது மிகவும் முக்கியமாகும். உங்கள் உடலில் அளவுக்கு அதிகமான கொழுப்பு இல்லையென்றால், தானாகவே விந்தணு உற்பத்தி மேம்படும். அதனால் இளைத்த எடையில் ஆரோக்கியமாக விளங்கிடுங்கள். மேலும் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கவும் மெட்டபாலிச வீதத்தை மேம்படுத்தவும் இது உதவுகிறது.


யோகா
ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டை குணப்படுத்த உதவும் சிறந்த வழிகளில் யோகாவும் ஒன்றாகும். இது உடலில் உள்ள இரத்த ஓட்டத்தை சீர்படுத்தி பாலியல் உறுப்புகளை ஊக்குவிக்கும்.


கீரை மற்றும் பச்சை காய்கறிகள்
ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் ஜிங்க் வளமையாக உள்ள கீரை மற்றும் பச்சை காய்கறிகள் உங்கள் ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டை சிறப்பாக குணப்படுத்தும்.


பீன்ஸ்
பீன்ஸ், குறிப்பாக கிட்னி பீன்ஸில், ஜின்க் வளமையாக உள்ளது. இதனால் ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாடு மற்றும் ஆண்மை குறைவை இயற்கையான வழியில் இது குணப்படுத்தும்.


காளான்கள்
ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டை குணப்படுத்தும் மற்றொரு ஆச்சரியமளிக்கும் உணவு தான் காளான்கள். ஜிங்க் மற்றும் இதர கனிமங்கள் இதில் வளமையாக உள்ளது.


பாதாம்
வால்நட்களை போல் ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டை இயற்கையான வழியில் குணப்படுத்தும் ஆச்சரியமளிக்கும் மற்றொரு உணவு தான் பாதாம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *