அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள சூறாவளி மற்றும் புயல் காரணமாக இதுவரையில் 20 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளைச் சூறாவளி மற்றும் புயல் தாக்கி வருகிறது. இதன் காரணமாகப் பெருமளவான குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனிடையே, சீரற்ற வானிலை காரணமாக ஜோர்ஜியாவில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது