கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 4 மில்லியன் ரூபாய் பெறுமதியான சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (30) காலை துபாயில் இருந்து நாட்டிற்கு வந்த சந்தேக நபர், விமான நிலைய வௌியேறும் முனையத்தில் வைத்து, பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் விமான நிலையப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபரிடமிருந்து 20,000 சிகரெட்டுகளை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். சம்பவம் குறித்து போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.