• Wed. Jun 10th, 2026

11 மாவட்டங்களுக்கு மின்னல் எச்சரிக்கை

Byadmin

Apr 6, 2025

சப்ரகமுவ, மத்திய, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்கள் மற்றும் முல்லைத்தீவு, வவுனியா, குருநாகல் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

இந்த வானிலை அறிவிப்பு இன்று (ஏப்ரல் 06) இரவு 11.00 மணி வரை அமலில் இருக்கும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

மின்னல் தாக்கங்களால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *