• Wed. Oct 15th, 2025

இலங்கை – IMF 4 ஆவது கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவு

Byadmin

Apr 7, 2025

சர்வதேச நாணய நிதியத்தின் நான்காவது மீளாய்வு தொடர்பான கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று (07) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இலங்கை அரசாங்கம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துக்கு இடையிலான நீடிக்கப்பட்ட கடன் வசதி வேலைத்திட்டத்தின் (EFF) நான்காவது மீளாய்வு தொடர்பான ஆரம்ப கட்டக் கலந்துரையாடல் இங்கு இடம்பெற்றது.

சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தின் போது இலங்கை இதுவரை அடைந்துள்ள முன்னேற்றம் மற்றும் எதிர்கால நிதி இலக்குகளை அடைவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

அமெரிக்காவின் புதிய வரி விதிப்பைத் தொடர்ந்து இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார சவால்கள் குறித்தும் இரு தரப்பினரும் கவனம் செலுத்தினர்.

சர்வதேச நாணய நிதியத்தின் சார்பாக ஆசியா மற்றும் பசுபிக் பிராந்திய பிரதிப் பணிப்பாளர் சஞ்சய பந்த் (Sanjaya Panth), சிரேஷ்ட தூதுக்குழுத் தலைவர்களான பீட்டர் ப்ரூவர் (Peter Breuer), ஈவான் பபாஜியோரிஜியோ (Evan Papageorgiou) ஆகியோர் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு மற்றும் இலங்கை அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ, நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோரும் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2025-04-07

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *