பிரேத பரிசோதனையை ஹோமாகம மரண விசாரணை அதிகாரி சமாதான நீதவான் சிந்தக உதய குமார மேற்கொண்ட நிலையில், சடலத்தின் பிரேத பரிசோதனையை ஹோமாகம ஆதார வைத்தியசாலையின் விசேட சட்ட வைத்திய அதிகாரி பிரணீத செனவிரத்ன மேற்கொண்டார்.
இதன்போது, வெளியிடப்பட்ட ஆதாரங்கள் மற்றும் பிரேத பரிசோதனை வைத்திய அறிக்கையின் அடிப்படையில், இறந்த பெண்ணின் உடல் பாகங்களையும், மூன்று மாத கருவின் உடல் பாகங்களையும் அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பி, இறப்புக்கான காரணத்தை குறிப்பிடாமல், திறந்த தீர்ப்பை வழங்க, பிரேத பரிசோதனையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.