• Sat. Oct 11th, 2025

எரிவாயு சிலிண்டர் கசிவு; கிளிநொச்சியில் பெண் உயிரிழப்பு

Byadmin

Apr 22, 2025

கிளிநொச்சி மருதநகர் பகுதியில் கடந்த 20 ஆம் திகதி பெண்ணேருவர் தனது வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது, எரிவாயு சிலிண்டர் கசிவு காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது பெண்ணின் ஆடையில் தீப்பற்றி. பலத்த காயங்களுடன் அவர் கிளிநொச்சி பொது மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.இந்நிலையில் குறித்த பெண் சிகிச்சை பலனின்றி இன்று (22) உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் 59 வயதான பெண் உயிரிழந்துள்ள நிலையில் சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *