உயர்தர (2024) பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்களை மே 2 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை சமர்ப்பிக்கலாம் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் பரீட்சை பெறுபேறுகளை மறுபரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்களை https://onlineexams.gov.lk/eic என்ற இணைப்பின் மூலம் சமர்ப்பிக்க வேண்டும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.