சுவிட்சர்லாந்தின் Lausanne மாகாணத்தில் நன்னீர் அடங்கிய ஐரோப்பாவின் மிகப்பெரிய மீன்கள் அருங்காட்சியம் திறக்கப்பட்டுள்ளது.
Aquatis என பெயரிடப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தில் 46 தொட்டிகள் உள்ளன. இதனுள் 10,000 மீன்களும், 100 ஊர்வன மற்றும் நீர் நில உயிரிகளும், 200 விதமான வேறு நீர்வாழ் உயிரிகளும் உள்ளன. 15 ஆண்டுகளின் திட்டமிடலில் உருவாக்கப்பட்ட அருங்காட்சியகம் கடந்த 21ம் திகதி திறக்கப்பட்டது.
முதல் வாரத்திலேயே 6,500 பார்வையாளர்கள் வந்து பார்த்துள்ளதால் ஆண்டிற்கு சுமார் 4 லட்சத்து 50 ஆயிரம் பார்வையாளர்கள் வருவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு நீர்ச்சூழல்களை பாதுகாத்தல் மற்றும் அவற்றின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்விதமாக அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளதாக இதன் நிறுவனர் Angélique Vallée-Sygut தெரிவித்துள்ளார்.