• Sun. May 24th, 2026

புதிய கொரோனா திரிபு : மீண்டும் கட்டுப்பாடு??

Byadmin

May 29, 2025

புதிய கொவிட் 19 திரிபால் ஏற்படும் உலகளாவிய அச்சுறுத்தலைக் கருத்திற் கொண்டு, சுகாதார அமைச்சு சில மருத்துவமனைகளில் பி.சி.ஆர். பரிசோதனையை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். 

பி.சி.ஆர் பரிசோதனை வசதிகளைக் கொண்ட மருத்துவமனைகள் தற்போது கொவிட் 19 நோயாளிகளைக் கண்டறிய அதிக அவதானத்துடன் இருப்பதாக அவர் கூறியுள்ளார். 

காய்ச்சலால் அனுமதிக்கப்படும் அல்லது சிகிச்சை பெறும் நோயாளிகள் தொடர்பான கண்காணிப்பை அதிகரிக்க மருத்துவமனைகளுக்கு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

எவ்வாறாயினும், இலங்கை தொடர்ந்து நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிக்கும் என்றும், ஆனால் உடனடியாக எந்த கட்டுப்பாடுகளையும் விதிக்க முடியாது என்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *