• Sat. Oct 11th, 2025

3 மாதங்களேயான குழந்தை உயிரிழப்பு

Byadmin

May 31, 2025

யாழில் பிறந்து 3 மாதங்களேயான பெண் குழந்தை ஒன்று நேற்றைய தினம் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

சங்கானை – நிற்சாமம் பகுதியைச் சேர்ந்த திகாசன் அபிசிறி என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

உடற்கூற்று பரிசோதனை

குறித்த குழந்தை கடந்த 11.02.2025 பிறந்துள்ளது.

இந்நிலையில் குழந்தைக்கு வயிற்றில் கட்டி என்ற காரணத்தால் 07.05.2025 அன்று வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் 3 தடவைகள் குழந்தைக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளது. குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

கிருமித்தொற்று ஏற்பட்டதால் மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *