நானுஓயா சமர்செட் லேங்டல் தோட்டத்தில் 28 லயன் குடியிருப்புக்களை கொண்ட குடியிருப்பு தொகுதி ஒன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் 26 குடும்பங்களைச் சேர்ந்த 120 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
அவர்கள் தற்காலிகமாக சமர்செட் கார்லிபேக் பாடசாலையில் தற்காலிகமாகதங்கியுள்ளனர் அவர்களுக்கான உலர் உணவு பொருட்கள் அப்பகுதி கிராம உத்தியோகத்தர் புவனேந்திரன் தலைமையில் நுவரெலியா பிரதேச செயலகத்தினூடாக வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும் லயன் குடியிருப்புகளில் பாரிய வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதால் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிகாரிகள் நாளைய தினம் வருகைத் தந்து இதனை அறிக்ககையிடவுள்ளதாக அப்பகுதி கிராம உத்தியோகத்தர் புவனேந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் இவர்களுக்கு தேவையான உதவிகள் தோட்ட அதிகாரி கோசல விஜேசேகரவினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.