சிகரெட்டானது அதனைப் புகைப்பவருக்கு மட்டுமல்ல, அவரைச் சுற்றியுள்ள மக்களின் ஆரோக்கியத்திற்கும் ஆபத்தானது. சிகரெட் புகையானது நுரையீரல், இதயம் மற்றும் சுவாச நோய்களுக்கு ஒரு முக்கிய காரணமாகும். குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு சிகரெட் புகை மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது.
இதனால்தான், உலகெங்கிலும் உள்ள நாடுகளில் உள்ள அரசுகள் பொது இடங்களில் புகைபிடிப்பதை நிறுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்தச் சூழலில் சிகரெட் புகைப்பது தொடர்பாக ஃபிரான்ஸ் முக்கிய விதியை ஜூலை முதல் கடுமையாக அமல்படுத்த உள்ளது. பொது இடங்களில் புகைபிடிப்பதை முற்றிலுமாகத் தடைசெய்ய இந்தப் பெரிய முடிவை அந்நாடு எடுத்துள்ளது.
குழந்தைகள் அடிக்கடி செல்லும் இடங்களான கடற்கரைகள், பூங்காக்கள் மற்றும் பேருந்து நிறுத்தங்கள் உள்ளிட்ட அனைத்து வெளிப்புற இடங்களிலும் புகைபிடிப்பதை ஃபிரான்ஸ் தடைசெய்ய உள்ளது.
இந்தத் தகவலை அந்நாட்டின் சுகாதார மற்றும் குடும்ப அமைச்சர் சமீபத்தில் ஒரு நேர்காணலில் தெரிவித்தார்.