• Sun. Oct 12th, 2025

அமெரிக்காவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி : ஈரான் அதிரடி

Byadmin

Jun 18, 2025

இஸ்ரேல்-ஈரான் மோதல் ஆறாவது நாளாகத் தொடரும் நிலையில், இஸ்ரேலுக்கு ஈரான் பதிலடி கொடுக்கும் என்று ஈரான் நாட்டின் தலைவர் அயோத்துல்லா அலி காமெனி எச்சரிக்கை விடுத்துள்ளார். 

ஈரான் நிபந்தனையற்ற சரண் அடைய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அழைப்பு விடுத்திருந்த நிலையில், காமெனி இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். 

இன்று இந்தப் போரில் மிகப்பெரிய திருப்பம் ஏற்படும். அமெரிக்கா, இஸ்ரேல் எதிர்பார்க்காத மிகப்பெரிய அதிர்ச்சி தரும் சர்ப்ரைஸ் ஒன்று காத்திருக்கிறது என்று ஈரான் தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் நிபந்தனையற்ற சரண் அடைய வேண்டும் என்று அச்சுறுத்தியதையடுத்து, ஈரான் உயரிய தலைவர் அயோத்துல்லா அலி காமெனி எக்ஸ் (X) சமூக வலைத்தளத்தில் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில், “போர் தொடங்குகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் இன்டர்நேஷனல் செய்தி நிறுவனத்தின் மொழிபெயர்ப்பின்படி,  அயோத்துல்லா அலி காமெனி தனது பதிவில் “அலி கைபாருக்குத் திரும்புகிறார்” என்று கூறி உள்ளார். 

அதவாது யூத நகரமான கைபாரை கைப்பற்றிய இஸ்லாமிய வரலாற்றை குறிக்கும் விதமாக அவர் இந்த போஸ்டை செய்துள்ளது. இது ஷியா இஸ்லாத்தின் முதல் இமாம்படி 7-ம் நூற்றாண்டில் யூத நகரமான கைபாரைக் இஸ்லாமியர்கள் கைப்பற்றியதைக் குறிக்கும் விதமாக அவர் இந்த போஸ்டை செய்துள்ளது. 

அந்தப் பதிவில், ஒரு நபர் கையில் வாளுடன் கோட்டை போன்ற வாயிலுக்குள் நுழைவது போன்றும், வானத்தில் தீப்பிழம்புகள் தெரிவது போன்றும் ஒரு புகைப்படம் இடம்பெற்றுள்ளது. மேலும், சில நிமிடங்களுக்குப் பிறகு, காமெனி இஸ்ரேலுக்கு மற்றொரு எச்சரிக்கை விடுத்தார். அதில், “பயங்கரவாத சியோனிச ஆட்சிக்கு நாம் ஒரு வலுவான பதிலடியைக் கொடுக்க வேண்டும். சியோனிஸ்டுகளுக்கு நாம் கருணை காட்ட மாட்டோம்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதை உலக நாடுகளே எதிர்பார்த்து இருக்காது என்று ஈரான் கூறி உள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் ஆறாவது நாளாக நீடித்து வருகிறது. புதன்கிழமை அதிகாலையில் முதல் இரண்டு மணி நேரத்தில் இஸ்ரேலை நோக்கி ஈரான் இரண்டு முறை ஏவுகணைகளை ஏவியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. 

இதனால் டெல் அவிவ் நகரில் வெடிச்சத்தம் கேட்டது. இதற்கிடையில், டிரம்ப் ஜி7 மாநாட்டிலிருந்து முன்னதாகவே புறப்பட்டு வந்து, தேசிய பாதுகாப்பு கவுன்சிலுடன் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 90 நிமிடங்கள் கலந்துரையாடினார். மேலும் அவர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பேசியதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *