• Sat. Oct 11th, 2025

விசாரணையில் ஏன் தாமதம்? நீதவான் பொலிஸாரிடம் கேள்வி

Byadmin

Jun 24, 2025

கொட்டாஞ்சேனையில் உயிரிழந்த மாணவி பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பான விசாரணையின் முன்னேற்றம் குறித்து அறிக்கை அளிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது. 

கொழும்பு வடக்கு குழந்தைகள் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகள், உயிரிழந்த சிறுமியின் தாய், மூன்று மாணவிகள் மற்றும் ஒரு ஆசிரியரிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர். 

விசாரணைக்குத் தேவையான பாடசாலையின் சிசிடிவி கெமராக்களின் டி.வி.ஆர் இயந்திரம், மற்றொரு விசாரணைக்காக பொது நிர்வாக அமைச்சகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இதனால் ஏற்பட்ட தாமதம் குறித்து கேள்வி எழுப்பிய நீதவான், உடனடியாக இயந்திரத்தைப் பெற்று மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். 

இதன் பின்னர் முறைப்பாட்டை எதிர்வரும் ஜூலை 7 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு அழைக்க உத்தரவிட்ட நீதவான், அன்றைய தினம் விசாரணையின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *