மீன்பிடிக்க முயன்ற 10 வயது சிறுவன் கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
யாழ். அச்சுவேலி – தோப்புப் பகுதியில் நேற்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த பிரதீபன் தக்ஷன் (வயது 10) என்பவரே உயிரிழந்துள்ளார்.
தனது பேரனுடன் குறித்த சிறுவன் தோட்டத்துக்குச் சென்ற போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சிறுவனின் சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.