• Sat. Apr 4th, 2026

எரிபொருள் விலை அதிகரிப்பு

Byadmin

Jul 1, 2025

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை அதிகரிக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. 

லங்கா ஒட்டோ டீசல் ஒரு லிட்டரின் விலை 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்ட நிலையில், அதன் புதிய விலை 289 ரூபாயாகும். 

மண்ணெண்ணெய் ஒரு லிட்டரின் விலை 7 ரூபாயால் அதிகரிக்கப்பட்ட நிலையில், அதன் புதிய விலை 185 ரூபாயாகும். 

மேலும் 92 ஒக்டேன் பெற்றோல் ஒரு லிட்டரின் விலை 12 ரூபாயால் அதிகரிக்கப்பட்ட நிலையில், அதன் புதிய விலை 305 ரூபாயாகும். 

இந்நிலையில், லங்கா ஐஓசி நிறுவனமும் இலங்கை  பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைய, எரிபொருள் விலைகளை திருத்தியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *