• Sun. Oct 12th, 2025

ரயிலில் மோதி காட்டு யானை பலி

Byadmin

Jul 18, 2025

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற ரயிலில் இன்று (18) அதிகாலை காட்டு யானை ஒன்று மோதியுள்ளது. 

கல்லெல்ல பகுதியில் அதிகாலை 5:30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் அந்த யானை உயிரிழந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த காட்டு யானை அப்பகுதியில் உள்ள நெல் களஞ்சியசாலைகளை உடைத்து அவற்றினுள் நுழைந்து நெல்லை உணவாக உட்கொள்வதாகவும், இன்று அதிகாலை 3.00 மணி முதலே காட்டு யானை கிராமத்தில் சுற்றித் திரிந்ததாகவும் பிரதேசவாசி ஒருவர் தெரிவித்தார். 

காட்டு யானை கிராமத்திற்குள் நுழைந்த போது வனவிலங்குத் திணைக்களத்திற்கு தகவல் வழங்க கிராம மக்கள் நடவடிக்கை எடுத்திருந்தாலும், அதிகாரிகள் தொலைபேசி இணைப்பை துண்டித்ததாகவும் கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

காட்டு யானை கிராமத்திற்கு அடிக்கடி வருவதாகவும், வனவிலங்குத் திணைக்களம் இது தொடர்பாக சரியான நடவடிக்கை எடுத்திருந்தால், இதுபோன்ற ஒரு துயரம் நிகழ்ந்திருக்காது என்றும் கிராம மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 

இவ்வாறு இறந்த காட்டு யானை சுமார் 15 வயதான 8 அடி உயரமானது என வனவிலங்கு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *