2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நடத்துவதற்கான திகதியை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, ஓகஸ்ட் 10 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் 2,787 தேர்வு நிலையங்களில் பரீட்சை நடைபெறும்.
இரண்டாம் தாள் காலை 9.30 மணிக்கு தொடங்கி 10.45 மணிக்கு முடிவடையும். முதல் தாள் காலை 11.15 மணிக்கு தொடங்கி மதியம் 12.15 மணிக்கு முடிவடையும்.
விண்ணப்பதாரர்களின் விவரங்களில் திருத்தங்களை ஜூலை 25 முதல் ஓகஸ்ட் 4 வரை நிகழ்நிலை முறை மூலம் செய்யலாம்.