• Sat. Oct 11th, 2025

ஆண்மைகுறைவு, நரம்பு தளர்ச்சியை மாயமாய் போக்கும் ஓரிதழ் தாமரை!

Byadmin

Oct 4, 2025

ஆண்மைகுறைவு, நரம்பு தளர்ச்சியை மாயமாய் போக்கும் ஓரிதழ் தாமரை!

தாமரை என்றவுடன் நீரில் இருக்கும் என்று நினைத்துவிடாதீர்கள். இது நிலத்தில் வளரும் சிறு செடி வகையாகும். இதன் இலையை வாயில் வைத்து சுவைத்தால் வாயில் குழகுழப்பு தட்டும்.

இது நிலத்தில் வளரக்கூடிய சிறு செடியினத்தைச் சேர்ந்த இதன் பூ சிவந்த நிறமும் நடுவில் நாமம் போன்றும் காணப்படும். இதன் காய் ஒற்றைக்கல் மூக்குத்தி போலிருக்கும். வயல்வெளி மற்றும் சதுப்பு நிலங்களில் வளரக்கூடிய இந்த மூலிகைக்கு “இரத்தின புருஷ்” என்ற பெயரும் உண்டு.

இதன் இலை, தண்டு, பூ, வேர், காய் அனைத்துமே மருத்துவக் குணம் கொண்டது.

சமூலம் (வேர் முதல் பூ வரை) முழுவதையும் மருத்துவத்திற்கும், வகார வேலைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

நரம்புகள், சிறுநீர் சம்பந்தமான பிரச்சினைகள், ஆன்மைகுறைவு, நரம்பு தளர்ச்சி, சீக்கிரம் விந்து வெளியேறுதல், தூக்கத்தில் விந்து வெளியேறுதல், இதய நோய்கள் இன்னும் ஏராளமான கொடிய வியாதிகட்கும் ஒரு அருமருந்து.

சமூலம் முழுவதையும் வேர் அருபடாமல் பிடிங்கி நிழலில் காயவைத்து இடித்து சலித்து பனங்கற்கன்டு சேர்த்து வைத்துக்கொண்டு தேன் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் ஆண்மைகுறைவு தீரும்.

நெய் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமாகி வெள்ளை, வெட்டைச்சூடு, அதிமூத்திரம், நுரையீரல் நோய்கள், இதய நோய்கள், தலைவலி.காமாலை போன்ற 40 வகையான நோய்களும் தலை தெறிக்க ஓடி விடும்.

இளநீரில் கலந்து ஓரிதழ்தாமரைப்பொடி, நெல்லிகாய் பொடி,குப்பைமேனிபொடி, சீந்தில் பொடி,கீழாநெல்லிபொடி, வில்வ இலைப்பொடி,மஞ்சள், கரிசலாங்கண்ணிப்பொடி, சக்தி சாரனை இலைப்பொடி, கடுக்காய்பொடி,ஆகிய ஒன்பது பொடிகளையும் ஒன்றாகக் கலந்து வைத்துக்கொண்டு தினமும் ஒரு ஸ்பூன் வீதம் 90 நாளைக்கு சுத்தமான பசு நெய்யில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் வச்சிரமடைந்து ஞானம் சித்திக்கும்.

#– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *