• Sat. Oct 11th, 2025

உயர்தரத்தில் சிறந்த பெறுபேறு பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா

Byadmin

Jul 27, 2025

ஜனாதிபதி நிதியத்தால் செயல்படுத்தப்படும் 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் திறமை செலுத்திய மாணவர்களை கௌரவிக்கும் கிழக்கு மாகாண நிகழ்வு நாளை (27) காலை 9.00 மணிக்கு மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா நுண்கலை பீடத்தில் நடைபெறும்.

இந்தத் திட்டத்தின் கீழ், 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் திறமை செலுத்திய ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 60 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நிதி புலமைப்பரிசில் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

மாகாண மட்டத்தில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம் அண்மையில் வட மாகாணத்தில் தொடங்கப்பட்டது.

அதன் முதல் நிகழ்வு கிளிநொச்சியிலும், இரண்டாவது நிகழ்வு தென் மாகாணத்தை மையமாகக் கொண்டு மாத்தறை மாவட்டத்திலும் செயல்படுத்தப்பட்டது.

க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் மூன்றாவது நிகழ்ச்சி கிழக்கை மையமாகக் கொண்டு நடைபெறுவதோடு அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த உயர்தரத்தில் சிறந்த பெறுபேறு பெற்ற 360 மாணவர்கள் கௌரவிக்கப்படுவார்கள்.

இந்த நிகழ்வில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன பிரதம அதிதியாகக் கலந்து கொள்ள உள்ளார்.

எதிர்காலத்தில் இந்த திட்டத்தை ஏனைய மாவட்டங்களிலும் செயல்படுத்த ஜனாதிபதி நிதியம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *