யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் உதயசூரியன் மைதானத்தின் அருகாமையில் வெள்ளிக்கிழமை (25) இரவு 10 மணியளவில் பெருந்தொகையான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது
புலனாய்வு துறையினருக்கு மற்றும் கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மருதங்கேணி பொலிஸாரால் ஓர் விசேட சுற்றிவளைப்பு ஒன்றை வத்திராயன் பகுதி முழுவதும் வெள்ளிக்கிழமை (25) அன்று மேற்கொள்ளப்பட்டது
இச் சுற்றி வளைப்பில் 34 பொதிகள் அடங்கிய 60.256 kg கேரள கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளதுடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏனைய சந்தேக நபர்கள் தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றதோடு கைப்பற்றப்பட்ட போதைப்பொருளையும் சந்தேக நபரையும் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.