• Sat. Oct 11th, 2025

21ம் நூற்றாண்டின் நீண்ட சூரியகிரகணம்

Byadmin

Jul 29, 2025

இந்த நூற்றாண்டின் மிக நீண்ட நேர சூரியகிரகணமானது 2027ஆம் ஆண்டு ஆகஸ்ட் இரண்டாம் திகதி நிகழவிருப்பதாகவும், அப்போது ஐரோப்பா, வட ஆப்ரிக்க, மத்திய கிழக்கு நாடுகள் 6 நிமிடங்களுக்கு இருளில் மூழ்கலாம் என்றும் கூறப்படுகிறது.

2027ஆம் ஆண்டு நிகழவிருக்கும் சூரிய கிரகணத்தின்போது, சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு வந்து மிகச் சரியாக 6 நிமிடங்கள் 23 வினாடிகளுக்கு மறைத்தபடி நிற்குமாம்.இதுதான், உலகிலேயே மிக நீண்ட நேர சூரிய கிரகணமாகக் கருதப்படுகிறது. இது வழக்கமான ஒரு சூரிய கிரகணமாக இருக்காது. இது இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சூரிய கிரகணமாக இருக்கும்.

அதாவது, இரு வெவ்வேறு இடங்களில் சுற்றுவட்டப் பாதைகளில் பயணிக்கும் பூமியும், நிலவும், சூரியனின் நேர்க்கோட்டில் வரும். பூமிக்கு இடையே வரும் நிலவு, சூரியனை முழுமையாக மறைக்கிறது.

இது அதிக மக்கள் தொகை நிறைந்த நாடுகளில் தெரியும். இதனை ஏராளமானோர் நேரில் காணப்போகிறார்கள். ஆனால் என்ன? 2025 அல்லது 26ஆம் ஆண்டில் ஆண்டில் நிகழப்போவதில்லை.சமூக வலைத்தளங்களில் வெளியாவதைப் போல வரும் ஆகஸ்ட் 2ஆம் திகதி எந்த கிரகணமும் நிகழப்போவதில்லையாம். ஆகஸ்ட் 2ஆம் திகதி உலகமே இருளில் மூழ்கப் போவதாக நாசா அறிவித்திருப்பதாக வெளியாகும் தகவல்கள் அனைத்தும் போலியானவை.

அன்றைய நாளில் உலகம் இருளில் எல்லாம் மூழ்காது.அதனை காண 2027 வரை காத்திருக்க வேண்டும். பலரும் அந்தநாளை தங்களது காலாண்டில் குறித்து வைத்துக் கொண்டு, அதனை நேரில் காண உலக நாடுகளுக்குப் பயணத்தை திட்டமிட்டு வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *