• Mon. Oct 13th, 2025

சிறுவனுக்கு மனம் நிறைந்த பாராட்டு

Byadmin

Aug 3, 2025

நேற்று மாலை, 8.30 மணியளவில், பண்டாரவளை Cargills கடைக்கு அருகே, ஒரு கூடையை சுமந்து கொண்டு வந்த ஒரு சிறுவனை சந்தித்தேன். அவன் பாட்டிக்கு மருந்து வாங்க pharmacy க்கு வந்திருந்தான். நான் எதேச்சையாக கூடையில் என்ன இருக்கு?
நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டேன். அவன் சுருக்கமாக,
“நான் வியாபாரம் செய்கிறேன்” என்றான்.

நான் அவனிடம் பாடசாலைக்கு போவதில்லையா? என்று கேட்டேன் அவன் தலையை பணித்தவாறு ,
“நான் பாடசாலைக்கு செல்கிறேன். நான் ஏழாம் வகுப்பு, எனக்கு வயது 11. பகல் 2 மணிக்கு பிறகு தொதல் (dodol) விற்கிறேன்” என்றான். அவன் சொன்னது என்னை யோசிக்க வைத்தது.

நான் அவனிடம் மெதுவாக பெற்றோர்களைப் பற்றி கேட்டேன். அவன் சொன்னான்: அவனுடைய அப்பா வேறொரு பெண்ணை கல்யாணம் செய்து கொண்டு குடும்பத்தை விட்டு சென்று விட்டார் என்றும். அவனுடைய அம்மா வேறொரு ஆணுடன் போய்விட்டார் என்றும் இப்போது அவனும், அவனுடைய தங்கையும், அவர்களுடைய பாட்டியுடன் ஒன்றாக வாழ்வதாக கூறினானான்.

பாட்டி செய்து தரும் தொதலை விற்கிறேன். பெரிய வருமானம் இல்லாவிட்டாலும் சந்தோஷமாக வாழ்வதாக கூறினானான். அவனின் பேச்சில் தைரியமும் தன்னம்பிக்கையும் நிறைந்திருந்தது.

அவன் கதை என் மனதை ஆழமாக தொட்டது. நான் அவனுக்கு சாப்பாடு மற்றும் குடிபானம் வாங்கிக் கொடுக்க முயன்றேன். ஆனால் அவன் மறுத்துவிட்டு சொன்னான்: ” நீங்கள் எனக்கு தரும் சாப்பிட்டை என்னால் என் பாட்டிக்கும் தங்கைக்கும் வாங்கிக் கொடுக்க முடியாது. அவர்களுக்கு இதே மாதிரி சுவையான சாப்பாடு கிடைக்காது. ஆகையால, நான் வீட்டுக்குப் போய் அங்கே அவர்களுடன் இருக்கிறதைத்தான் சாப்பிடுவேன்.” என்றான்

இவ்வளவு சிறு வயதிலேயே அவன் காட்டிய தைரியமும் பொறுப்புணர்வும் என்னை மிகவும் வியப்பூட்டியது. நான் அவனுக்கு கொஞ்சம் பணம் கொடுத்தேன். உடனேயே, அவன் தன் பாட்டியை தொடர்பு கொண்டு எனக்கு இவர் இவ்வளவு பணம் தந்தார் என்று கூறினான். இந்த செயல் என்னை மேலும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியது. இப்படிப்பட்ட காலத்தில் இப்படி ஒரு சிறுவனா ஒரு நிமிடம் வாயடைத்து நின்றேன்.

நீங்களும் பண்டாரவளையிலோ அல்லது தியத்தலாவாவைச் சேர்ந்தவர்களாக இருந்தால், இந்த சிறுவனைப் பார்த்தால், தயவுசெய்து அவனிடமிருந்து கொஞ்சம் தொதல் வாங்கிச் செல்லுங்கள் அது இவனுடைய கஷ்டம் குறையவும், தன்னம்பிக்கை அதிகரிக்கவும் உதவியாய் இருக்கும்.

( இந்த பதிவு இந்த சிறுவனை பிரபலப்படுத்தவோ அவமானப்படுத்தவோ அல்ல)

வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் எந்த ஒரு ஏழை எளிய மனிதர்களுக்கும் உதவுங்கள். இறைவன் உங்களுக்கு பன் மடங்காக திருப்பித் தருவார்.

Rifshad Pulyloon இன் முகநூல் பக்கத்திலிருந்து மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *