• Mon. Oct 13th, 2025

அமைச்சர் பிமல் நானுஓயா ரயில் நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயம்

Byadmin

Aug 15, 2025

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, நேற்று (14) பிற்பகல் நானுஓயா ரயில் நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார்.

இவ்விஜயத்தின்போது, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர, ஆராய்ச்சி மற்றும் உயர் கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன, பாராளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி உள்ளிட்ட மாவட்ட அரச அதிகாரிகள் உடனிருந்தனர்.

அமைச்சர் நானுஓயா ரயில் நிலையத்தை பார்வையிட்டு, பிரதான அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி, திருத்தப் பணிகள், நவீனமயமாக்கல் மற்றும் நிலையத்தில் உள்ள குறைபாடுகள் குறித்து ஆராய்ந்தார்.

சுற்றுலாப் பயணிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் அதிகரிப்பு மற்றும் நானுஓயாவிலிருந்து பதுளை செல்லும் ரயில்களுக்கு கூடுதல் பெட்டிகளை இணைத்து, அவற்றை சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் புனரமைப்பது குறித்து கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

மேலும், ரயில் நிலைய பணியாளர்களின் பிரச்சினைகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும் வாகன சாரதிகளின் பிரச்சினைகள் குறித்தும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *