நுவரெலியா மாவட்டத்தின் வீதி அபிவிருத்திப் பணிகளுக்கு 2,500 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
(14) மாலை, ஹட்டன் பேருந்து நிலையத்திற்கு மேற்கொண்ட கள விஜயத்தின்போது ஊடகங்களிடம் பேசிய அவர் இதனை அறிவித்தார்.
இந்த கள விஜயத்தில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான மஞ்சுல சுரவீர, ஆராய்ச்சி மற்றும் கிருஷ்ணன் கலைச்செல்வி, ஹட்டன்-டிக்கோயா நகரசபைத் தலைவர் அசோக கருணாரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், “பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பான வாக்குறுதியை நிச்சயமாக நிறைவேற்றுவோம். அவர்களுக்கு உரிய சம்பளம் வழங்கப்படும்,” என உறுதியளித்தார்.