பிள்ளைகளின் பிரபோதம் மிக்க மனம் அவர்களை புத்திசாலிகளாக்கி, அதன் மூலம் மோசடி மற்றும் ஊழலற்ற சமூகத்திற்கான தனிநபர்களை உருவாக்குவதாக சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.
புதிய கல்வி சீர்திருத்தங்கள், பிள்ளைகளை தங்கள் பிள்ளைப் பருவத்தை அதே வழியில் கழிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்ற பணியளர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில், பாடசாலைப் புத்தகங்கள் மற்றும் உபகரணங்களை வழங்கும் நிகழ்வு அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர, பணியாட்தொகுதியின் பிரதானியும் பிரதி செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன மற்றும் உதவி செயலாளர் நாயகம் ஹன்ஸ அபேரத்ன ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதன்போது 375 பாராளுமன்ற பணியாளர்களின் பிள்ளைகளுக்கு 587 புத்தகத்தொகுதிகள் வழங்கிவைக்கப்பட்டன.
அத்துடன், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த பிள்ளைகள், கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சியில் முதன் முறையாக சிறப்புத் தேர்ச்சி பெற்ற பிள்ளைகள் மற்றும் பாடசாலைக் கல்வி கற்கும் போதே இலங்கையில் மற்றும் வெளிநாடுகளில் நடைபெற்ற கலாசார, விளையாட்டு மற்றும் அழகியல் துறைகளில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற பிள்ளைகளுக்கும் புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டன.