• Sun. Oct 12th, 2025

நாட்டு மக்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை விடுத்துள்ள எச்சரிக்கை

Byadmin

Aug 22, 2025

நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் உரிமையாளர்களுக்கு, நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிகாரிகள் போல் நடித்து மோசடியான தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ளப்படுவதாக தெரியவந்துள்ளது.

மோசடி தொலைபேசி அழைப்புக்களில், சட்ட நடவடிக்கையை தவிர்ப்பதற்காக, குறித்த வணிக நிறுவன உரிமையாளர்கள், மோசடியாளர்கள் வழங்கும் வங்கிக் கணக்குகளில் பணத்தை வைப்பு செய்யுமாறு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

இது தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.

மோசடி தொலைபேசி அழைப்பு

நாட்டின் பல பகுதிகளிலிருந்து இதுபோன்ற முறைப்பாடுகள் கிடைத்துள்ளதால் இவ்வாறான மோசடிக்கு இரையாக வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மோசடி அழைப்புகள் வந்தால் 1977 என்ற இலக்கத்திற்கு அல்லது 0771088922 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தெரிவிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை, வணிக உரிமையாளர்களிடம் கேட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *